
வானத்தை
விண்கலங்களால்
கிழிக்கிறோம்
பூமியை
துளையிடும் கருவிகளால்
துளைக்கிறோம்
நீரை அசுத்தங்களால் நாசப்படுத்துகிறோம்
காற்றை
நச்சால் நிரப்புகிறோம்
காடுகளை
வெட்டிவீழ்த்துகிறோம்
மலைகளை
உடைத்து சிதைக்கிறோம்
உயிரினங்களை கொன்று
தீர்க்கிறோம்
கடல்களை
நெருப்பிட்டு எரிக்கிறோம்
வாழ்வு சுடுகிறதென
புலம்பித் திரிகிறோம்
லோகதனமாய்.
🦀
