இனிக்கும் தமிழ் – 195/டி வி.இராதகிருஷ்ணன்

வில்லி பாரதம் – சிறப்பு பாயிரம்

வியாசர் பதினெட்டு அத்தியாங்களில் சொன்ன மகா பாரதத்தை, தமிழில் வில்லி
புத்துராழ்வார் பத்து அத்தியாங்களில் பாடினார்.

காப்பியத்தின் முதலில் இறை வணக்கம் பாடுவது மரபு.

ஆனால் வில்லிபுத்துராழ்வார் முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடி
காப்பியத்தை அரங்கேற்றினார். அதனால் சர்ச்சை எழுந்து அவரது மகன் கடவுள்
வாழ்த்து பாடி சேர்த்ததாக ஒரு வரலாற்று குறிப்பு உள்ளது.

வில்லிபுத்துராழ்வார் பாடிய தமிழ் தாய் வாழ்த்து….

பொதிகை மலையில் பிறந்து, பாண்டியர்களின் அரவணைப்பிலே வளர்ந்து,
முச்சங்கத்தின் கவனிப்பிலே இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்து, நெருப்பிலே
நீந்தி, கற்றோர் நினைவிலே நடந்து, ஆதி நாள் திருமால் பூமி நீரில்
மூழ்கியபோது பன்றியாக அவதாரம் எடுத்து அதை தன் கொம்பிலே தாங்கி வெளியே
கொண்டு வந்தார், அப்போது அந்த பூமா தேவியோடு கூடவே பிறந்து வளர்ந்து
வந்தவள் இந்த தமிழ் தாய் என்று தமிழின் பெருமையை எடுத்து உரைக்கிறார்.

பாடல்

பொருப்பிலே பிறந்து தென்னன்
புகழிலே கிடந்து சங்கத்து
இருப்பிலே இருந்து வைகை
ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர்
நினைவிலே நடந்துஓ ரேன
மருப்பிலே பயின்ற பாவை
மருங்கிலே வளரு கின்றாள்

One Comment on “இனிக்கும் தமிழ் – 195/டி வி.இராதகிருஷ்ணன்”

Comments are closed.