லக்ஷ்மி ரமணன்/அவள்மாதிரி

மோகன் தன் மனைவி ரத்னாவுடன் நண்பன் ராஜேஷின் வீட்டு விருந்தில் கலந்து கொண்டபிறகு என் சநேகிதன் மனைவி சுபா எத்தனை நன்னா சமைக்கிறாள். நீ அவகிடேருந்து கத்துக்கோ.” என்றுசொன்னது புதியவிஷயமே இல்லை.அவன் எப்போதுமே இப்படித்தான்.

அவள் வீட்டை எத்தனை அழகாக வெச்சுண்டிருக்கா. உனக்கேன் இதெல்லாம் தெரியமாட்டேங்குது?அவளை நான் புகழறது உனக்குப்பிடிக்கலியா?
மோகன் இப்படிக்கேட்ட போதெல்லாம் ரத்னாவின் நெஞ்சை வார்த்தைகளால் அவன் குத்தியது போலிருக்கும்.

இவ்வளவிற்கும் மோகன் அவளைக்காதலித்து மணந்து கொண்டவன். அடிக்கடி தன் நண்பனின் மனைவியுடன் ரத்னாவை ஒப்பிட்டுப்பேசியது ஏன்?

சுபா பாராட்டப்பட வேண்டியவள்தான் அதற்காக தன்னை கணவன் மட்டம் தட்டிப்பேசுவது ரத்னாவுத்கு வேதனையை தந்தாலும் அவள் அமைதியாக இருந்தாள்
சில மாதங்களுக்குப்பிறகு உறவில் நடந்த திருமணம் ஒன்றிற்காக பெங்களூர் போய்விட்டு மோகனுடன் ரத்னா திரும்பிய போது வந்த அந்தச்செய்தி அதிர்ச்சி யைத்தருவதாக இருந்தது. ராஜேஷின் மனைவி சுபா தன்னுடன் கல்லூரியில் படித்த
நீலேஷ் என்கிற இளைஞனுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்டு திடீரென்று வீட்டை விட்டு ஓடிப்போய் விட்டாளாம்.அதைக்கேட்டதும் மோகன் அதிர்ந்து போய்
ரத்னாவை நிமிர்ந்து பார்க்கக்கூட திராணி இல்லாமல் குனிந்து கொண்ட போது “கவலைப்படாதீங்க. சுபா மாதிரி நான் நிச்சயம் இருக்க மாட்டேன்” என்றுவிட்டு அழகாக சிரித்தாள் அந்த அன்பு மனைவி. ,