
மொட்டாக இருந்தது மலராக மாறுமே
மலராக இருந்தது பிஞ்சாகத் தெரியுமே .
பிஞ்சுகள் காயாகி கனியாகி
வெளிவந்த விதைகள் மூலம்
தன்னினம் தழைத்திடச் செய்யுமே
இயற்கை எங்குப் படித்தது
இப்படி மாறுதல் செய்திடப்
படைப்பின் இலக்கணம் இதுவென
புரிந்திடு நன்னெஞ்சே. 1
இங்கே கிடைக்கும் கதிரொளி
தண்ணீர் காற்று எல்லாம்
தானே எடுத்துக் கொண்டு
பூமியில் வேர்தனை பிடித்து
புதுமை செய்யும் அருமை
தானும் வாழும்
மற்ற உயிர்களை
வாழ வைக்கும். 2
சிட்லபாக்கம்
01/02/2024 மாலை 05.10
