எஸ் . சண்முகம் கவிதை

சுவரை நோக்கி அமர்ந்திருந்தாலும்
என்னருகே வந்து மங்கிய
காலடி சத்தத்தின் நெருக்கம் குறையவில்லை

சமையலறை குழாயின் நீர்வீழ்தல்
என்றோ கண்ட அலையுடைந்த கரையாய்
பளிச்சிட்டு மறைந்தது

என் ஒரு நாள்
உன் ஒப்புதலின்றி
உன்னில் விழையும்
அசந்தர்ப்பத்தின் நொடியிது

மடிகணினியில் ஒலிக்கும்
ஜாஸ் கிடாரின் ஒலித்தொடரில்
நெளிந்தசையும் ஓருடல்

பக்கத்து வீட்டின்
வாசல் கதவின் நிழலில்
மூழ்கியிருக்கும் கோலத்தின் வளைவுகளில்
கால்பாவாமல் செல்ல வேண்டும்.


எண் ;