
1.
சாதாரணத் தேநீர் தான்…
குவளையும் கைபிடியும்
கைகளும் உதடும் பொழுதுகளும்
அதற்கு வெவ்வேறு
சுவை கூட்டுகின்றன.
2.
நீ ஊற்றிக் குடித்து
கழுவிக் கவிழ்த்த
தேநீர்க் கோப்பை நான்.
3.
நசுக்கிய இஞ்சி அல்லது
ஒரு ஏலக்காயுடன்
இப்போதுதான் ஊற்றிய
தேநீர் நாம்.
ருசித்துப் பருகுகிறது
நம் அன்பு.
4.
கோப்பை தானே உடைந்தது?
தேநீரின் ருசி
அப்படியே தான் இருக்கிறது
இன்னொரு பொழுதும்
மிக நெருங்கி வருகிறது.
