வேணு.ஜெயராமன்/முதுமை வரமா? சாபமா?….

ஓடி ஓடி உழைத்திட்ட இளமை
ஓய்ந்து தேய்ந்து போன முதுமை
இருக்கும் காலத்தில் இருந்த உறவு
இருண்ட காலம் நெருங்கும் போது?…..

இளைய மகன் வீட்டில் கூடுதல்
இரண்டு நாட்களாக பட்டினியோ……
மூத்த மகன் அழைத்து செல்லும்
முறை மாற்றம் தாமதமோ பாவம்……..

முதுமை என்பது வரமாக ஆக்கிட
இளமையில் தயார் செய்யாததோ!….
எல்லாமே உறவுக்கு என்று நினைத்து
தனக்கென வாழாத நிலையோ!……..

இப்போது ஒன்றே போதுமென
இருக்கும் இடமும் அதுவாகி விடும்…..
கைப் பொருள் சேரும் போதே
கையில் இறுக்கிக் கொள் நலம்…..

மாதந்தோறும் வரவு ஏதும் வந்தால்
மாதக் கடைசி தேதியின் போது…..
மகிழ்ச்சி சேர்ந்து வரும்-தவறினால்
வசைச் சொற்கள் வலிய நிற்கும்…….

இளமை,முதுமையை சிந்திக்காது
முதுமையின் போது இளமை வராது….
மரம் போல் மக்கட் பண்பு இல்லாத
மரத்தின் நிலைதான் முதுமைக்கு பரிசு……

முதுமை வரமா? சாபமா?என்றால்
இளமையே தீர்மானிக்க வேண்டும்…..
முதுமையின் நிலையை காண்கையில்
இளமையில் விழிப்புணர்வே வரம்….