
எங்கோ தான் நீயிருக்கவேண்டும்
ஊகமெல்லாம் வீண்…
இரு.. இரு.. இருந்து
கொண்டே இரு..
உனக்குள் உறுதியாய்
இரு…
உன்னையே மறக்கும்
நிழலுக்கு முரணாக இரு..
உண்மைக்கு நிழல்
பிறிதொரு உண்மை
என்று இரு..
இருளுக்குள் வதிந்தாலும்
இறுக்கமின்றி இரு..
இருப்பின் ஒளியில்
எதுவும் இருளில்லை..
இருக்கிறேன் என்று
இருப்பைக் கொட்டி முரசு
அறையாதே…
இருந்து இல்லாமல் போவதில் இருக்கும்
என்ற சத்தியத்தில் இரு..
இருக்கத்தான் வந்தோம்
இரு.. இரு..
இருந்து கொண்டே
இரு…
