விஜயலக்ஷ்மி கண்ணன்/வஞ்சி தூது



02.02.2024

கண்களில் மெய் மறந்து நின்ற கோலத்தில் காட்சி
மண்ணுக்கும் விண்ணுக்கும் தாவிய எண்ண ஓட்டங்கள்
படம் பிடித்து வரைய உள்ளம் காகிதமாகி
கைகள் தெடுகின்றன
தூவலை.

ஆலமரம் சுற்றிலும் பூத்துக் குலுங்கும் ரோஜாக்கள்
காலப்போக்கில் மிதிபட்டு காய்ந்து சருகானப் புல் மெத்தை.

ஓராயிரம் காதல் ஜோடிகள் இழைத்த கீதம்
நூறாயிரம் வண்டு இனங்களின் ரீங்காரம்
ஈர மண்ணில் கால் பதிந்து சுவடுகள் அழிந்த கதைகள்
பறபற என்று வட்டமிடும் பட்டாம்பூச்சிகள்.
நெஞ்சை கிள்ளி வளவன் விட்டு வேடிக்கை பார்க்கின்றன.

மஞ்சு மூடிய சுற்று புறம் தெளிய வைக்க ஆதவன் கிரணங்கள் எழும்பி எழும்பி வருகின்ற போது
பஞ்சு போன்று விலகும் நேற்றைய இருள்.

கொஞ்சிப் பேசி கிளி ஒன்று சொல்கிறது
வஞ்சியே, அஞ்சாமல் புனை வாய் இன்றைய காட்சியை.
மிஞ்சாமலும் சொல்லி விடு தூது.