சசிகலா விஸ்வநாதன் கவிதை

அறியாமல் சிந்தும்

கொடும் சொற்கள்,

மணலில் சிதறின
கூழாங்கற்கள் போல்

உருண்டோடுமா; என்ன?

மீண்டும் பொருக்கி சேர்க்கலாகுமா?

தெரியாமல் செய்தாலும்,

அறியாமல் உரைத்தாலும்,

மன வலி இலை என்றாகும்?


2-2-2024