02.02.2024
ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : புத்தகக் காட்சி பற்றி இன்னும் பேச வேண்டும்.
அழகியசிங்கர் : என்னைப் பொறுத்தவரைப் புத்தகக் காட்சி உணர்ச்சி வசப்பட்ட நிலைக்குப் போய்விட்டதாக நினைக்கிறன்
மோகினி : என்ன காரணம்?
அழகியசிங்கர் : மகன் குடும்பம் முழுதாகக் கலந்து கொண்டது. என் பையன் பொங்கல் வரை இங்கு இருந்தான். அவன்தான் என்னைப் புத்தகக் காட்சிக்கு ஸ்கூட்டரில் கொண்டு விடுவான்.
மோகினி : நீங்களே வண்டியை ஓட்ட முடியவில்லை இல்லையா?
அழகியசிங்கர் : உண்மைதான். அண்ணாசாலையில் வண்டி ஓட்டுவதுபோல் ஆபத்து வேற எதுவுமிருக்காது. உண்மையில் வண்டி ஓட்டுபவர்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள் ஓட்டுவது போலிருக்கும்
என் மீது வண்டியை மோதி விடுவதுபோல் தோன்றும். பயந்து பயந்து நான் ஓட்டிக்கொண்டு வருவேன். இந்த நிலை இப்போதுதான் ஏற்பட்டது..
ஜெகன் : நீங்கள் பதட்டம் அடைந்து விட்டீர்கள்.
அழகியசிங்கர் : உண்மைதான். நான் பதற்றமடைந்து விட்டேன். இதைத் தவிர சில கசப்பான் நிகழ்ச்சிகளும் நடந்தன. சாப்பாடு கூடத்தில் சாப்பிடும்போது சாப்பிடும் இலை மீது ஒரு ஈ மொய்க்க வரும். அப்படியே சாப்பிட வேண்டாமென்று தோன்றும். இதெல்லாம் சேர்ந்து டாக்டர் மாலதி குறிப்பிட்டதுபோல ‘ஸகோஜெனிக் ப்ருரைடஸ்’ என்ற மனக்குழப்பம் ஏற்பட்டது போல் தோன்றியது ..
மோகினி : எப்பிடி சொல்கிறீர்?
அழகியசிங்கர் : புத்தகக் காட்சியின் கடைசி நாளில் நான் தூங்கும்போது என் கால்களில் அரிப்பு ஏற்பட்டது. தாங்க முடியாத அரிப்பு. இதைத்தான் மாலதி ‘ஸகோஜெனிக் ப்ருரைடஸ்’ என்கிறார்.
ஆனால் அந்த நாள் மட்டும்தான். அடுத்த நாள் அப்படி இல்லை.
மோகினி : நீங்கள் தேவையில்லாமல் பதற்றம் ஆகியிருப்பீர்.
ஜெகன் : இன்றைய இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.
அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.
ஜெகன்: இன்று பேசியது போதும்.
அழகியசிங்கர். இரவு வணக்கம்.
(இரவு 11.03 மணிக்கு)
