மதுவந்தி/ஊசலாட்டம்

.

நீ இருக்கிறாய்.
நீ இல்லை.
இந்த இரு நிலைகளில்
சவால்களற்ற ஒரு நிச்சயத் தன்மை
கேள்விகள், சவால்கள்,
சந்தேகங்கள், குழப்பங்கள்,
தேடல், தெளிவு,மறு பரிசீலனை,
மீள் தேடல் என ஓயாத
அலைச்சலுள்ள இரு நிலைகள்,
நீ இருக்கலாம்.
நீ இல்லாமலும் இருக்கலாம்.
ஒன்றலிருந்து இன்னொன்றுக்கான
ஊசலாட்டத்தில் தொடர்கிறது வாழ்வு .

             . 04.02.24

One Comment on “மதுவந்தி/ஊசலாட்டம்”

  1. ஆகா! கவிதையில்தேடுவது கடவுளா, காதலியா, சொற்ப வார்ததைகளுக்கள் என்னவொரு விளையாட்டு! 👏👏

Comments are closed.