
மத்தளம் கொட்ட
வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தாமம் நிரை சார்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி
மதுசூதன் வந்தென்னை
கைத்தலம் பற்றக்…
கனா
கதவு தட்டும் ஓசையில்
பாதியில் தடை பட்ட கனா!
அம்மாவும் அப்பாவும்;
கண்ணில் ஆற்றாமை
ஆதங்கம்…
மணமகன்,
தயக்கம், பயம்
அருளற்ற மருளும் விழி;
இன்னும் பின்னே இருவர்,
வெருவலுடன் கூடிய வெற்றுப் பார்வை ;
எவரும் எதுவும் இயம்பிடும் முன்னரே,
நான் நொடியில்
முடிவெடுத்து,
“அம்மா!
இந்தத் திருமணத்தை நிறுத்துக!”
ஆ! ஆ! ஆ!
எம்மாதிரியான சொற்கட்டு!
பெற்றோர் முகத்தில்
பெரும் அமைதி!
மணவாளன் விழியில் நல்லுணர்வு!
பின் நின்ற பார்வையில்
வெற்றியின் கீற்றல்!
எனக்குள் அனைவருக்கும் நன்மை செய்த இனிமை, மட்டும்
பத்து வருடங்கள்
பின் அவரையே மணமுடித்த அன்று
அவர் கூறிய முதன்மை வார்த்தை
” மிக்க நன்றி”
அமைதி புன்னகையில் மீண்டும் நான்
4-2-2024
