
சிறுவர்களும் சிறுமிகளும்
ஓடியாடும் வீட்டிற்குள்
தானே உருவாகின்றன
யாவும்..
அவர்களின் சொற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பறவையாய்
உருமாறுகின்றன..
காற்று வனங்களைக்
கற்பனைத்து விளையாடுகிறார்கள்..
வேடிக்கை பார்க்கிற
ஒவ்வொருவர் மனத் துள்ளும்
உயிர்க்கின்றன விலங்குகள் அந்த வனத்துள் உலவிக் களிக்க…
