
04.02.2024
கால்கள் தரையில் பாவவில்லை
வானை முட்டும் மேகங்களைப் பிடித்து சொரிந்திட ஆசை
நிலாவைத் தொட்டுவிட பேராசை! நேற்றைய கனவு சுகமாக இருந்தது.
கோட்டை மாளிகை, மணிமண்டபம்,
தங்க கட்டில்,தாங்கி நிற்கும் பணிப் பெண்கள்!
வெள்ளித் தட்டில் இனிப்பு வகை வகை ஆகும்!
மன்மதன் தான்
இறங்கி வருகிரானோ?
இன்றும் கனவு தானா?
கலைந்ததும். தேரிந்தது.
நாலு சக்கிர நாற்காலியில் அவளும்
உள்ளம் போலவே கொதிக்கும்
சோறும் அடுப்படியில்.
