ஸ்ரீரங்கம் கிருஷ்ணன்/கண்ணீர் இல்லாத சோகம்

எனது அந்த ஓவியத்துக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது என்று செய்தி வந்துள்ளது. பல வருடங்களாக எனது ஹாபி.. ஓவியம் வரைதல். எனது தாத்தா ஒரு ராணுவ வீரர். ஆங்கிலேய ராணுவத்தில் இரண்டாம் உலகப் போரில் பணியாற்றியவர். அவர் பழைய டைரிகளை எடுத்துப் பார்த்தபோது ஒரு‌ சம்பவம் எழுதியிருந்தார். “பிரான்ஸில் பணியாற்றிக் கொண்டிருந்த போது நடந்தது. ஒரு கிராமத்தில் எதிரிகள் வான்வெளியில் தாக்குதல் நடத்தினர். ஒரு குண்டு மிகவும் அருகில் விழுந்தது. தூக்கி எரியப் பட்டேன்.விழுத்த இடம் ஒரு வயல்வெளி. சிறிய சிராய்ப்புகள் தான். பிரச்சனை இல்லை. எழுந்தேன். பக்கத்தில் ஒரு பெண் கைகால்கள் நடுங்க அமர்ந்திருந்தாள். அவள் பயத்தைத் தெளிய வைத்துச் சற்று பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றேன். என்னிடம் சில ‌ரொட்டித் துண்டுகள் இருந்தன. அவளின் பசி அறிந்து அதில் சிலவற்றைக் கொடுத்தேன். பல நாள் பசி போல. விரைவில் உண்டாள். சற்று நீரருந்தினாள். அவள் பேசிய மொழி எனக்குத் தெரிந்தது தான். அவள் அண்ணன் இராணுவ வீரர் தானாம். என்னில் அவனைக் காண்பதாகச் சொன்னாள்.இறைவன் எனக்குத் துணையாக இருக்க மனமுருகிப் பிரார்த்தனை செய்தாள். என் கையில் ஒரு கயிற்றைக் கட்டி அனுப்பினாள்.

விரைவில் போர் முடியவும் அவள் குடும்பம் ஒன்று சேரவும் பிரார்த்தனை செய்யச் சொன்னாள்.

ஒரு அண்ணனைப் போருக்கு அனுப்பும் வகையில் இருந்தது அவள் முகபாவம். கண்ணீரும் இல்லை; சோகமும், கொஞ்சம் திருப்தியும், கொஞ்சம் பெருமையும் கலந்த அந்த முகம் இறுதிவரை மறக்கவே முடியாது ” என்று எழுதி இருந்தார்.
அந்தப் பெண்ணைத்தான் கற்பனையில் படித்திருந்தேன்.

One Comment on “ஸ்ரீரங்கம் கிருஷ்ணன்/கண்ணீர் இல்லாத சோகம்”

Comments are closed.