தங்கேஸ் கவிதை

ஒரு பெரும் மழைக்காலத்தை

தேக்கி வைத்திருக்கின்றன

விழிகள்

ஊதற்காற்று வந்து 

உரசுவதற்காகத்தானே

காத்திருக்கின்றன

 எப்போதும் மேகங்கள்

நீ இரண்டு கரங்களையும்

விரித்து ஏந்தும் போது

அதில் பொழியும் துளிகள்

அவைகளை கடலென

நினைத்துக்கொள்ளும்

பின்பு அதிலிருந்து அலைகள்

எழும்பும்

. ஓயாத அலைகள் புரவிகளாக

கோடிக்கணக்கில்

கிளம்பி வரும்

சிறிய நீல  ரப்பர் பந்து போல

இந்த புவி உருண்டை

உன் உள்ளங்கைகளில்

மிதந்து கொண்டிருக்கும்