சசிகலா விஸ்வநாதன்/எதிர் சேவை

🌺 🌺


வளமோடு வாழ
விரிந்த வீடும்;
காப்புடன் இருத்தலுக்கான பெருங்கதவும்,
உதவுமா?
அந்தகன் ஓலை
வந்தாங்கே; கையாலாதே!
அழுது தவித்து நிற்பீரே!
வளமோடு வாழுங்கால்,
களிப்பாகக் களத்தில் இறங்கி எளியோரை உயர்த்திட்டால்;
பெறற்கரிய பெருவீட்டின் பெருவாசல் தானே
விரிந்து திறக்க; பரமன் வந்து சேவித்து இருப்பானே!


6-2-2024
மாலை மணி 5.30