அநியாயமில்லாத
நியாயம்

.***
எங்கள் ஊரிலேயே உயரமான கட்டிடம் அது
அழகான கட்டிடமும் கூட
அதன் முன் நின்று
புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்
பார்த்தவர்கள்
இதெல்லாம் ஒரு ஆசையா என்று சிரித்துவிட்டு போனார்கள்
நான் இன்னும் அதிகமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்
கொஞ்சம் கேளுங்கள்
நான் நிறைய வெற்றிகளிலிருந்து கீழே விழுந்தவள் இப்போதைக்கு
ஒன்று தான் மனதில் ஓடுகிறது
ஒன்று உயரம் எனக்கு முன்னால் இருக்க வேண்டும்
இல்லையென்றால் உயரத்தின் முன்னால் நானிருக்க வேண்டும்.
மற்றபடி ஒன்றுமில்லை.
7.2.2024

நல்ல கருத்து.
Dream Big