பி. ஆர்.கிரிஜா/அரிக்கன் விளக்கு

பள்ளிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த சுனில் தன்.அம்மாவைப் பார்த்து ” இது என்ன, புதுசா இருக்கே?” என்றான். “.இதுதாண்டா
அரிக்கன் விளக்கு. மண்ணெண்ணெய் ஊற்றி திரி போட்டு எரிய வைக்கணும் என்றாள். மண்ணெண்ணெய் என்றால் என்ன என்று எதிர் கேள்வி கேட்டான். அம்மாவும் பொறுமையாக இந்த காருக்கு பெட்ரோல் போடுவாங்களே,. அதே மாதிரி ஒரு எரி பொருள் என்றாள்.
சுனிலுக்கு எரி பொருள் என்றால் விளங்கவில்லை. மேலும் மேலும் கேள்வி கேட்டால் அம்மாவுக்கு கோபம் வருமே என்று ” உம்…. ஓகே “என்றான். சரி,
சரி…. ஸ்கூலுக்கு நேரமாச்சு, கிளம்பு என்றவாறு வெளியே பள்ளிக்கூட ஆட்டோவுக்கு காத்திருந்தாள்.
சுனிலும் அரை மனதோடு அந்த
விளக்கையே பார்த்துக் கொண்டு மெதுவாக வெளியே வந்தான்.
ஆட்டோவில் ஏறி பள்ளி வந்தவுடன் முதல் வகுப்பு ஆரம்பம்.
சுனிலின் சயின்ஸ் டீச்சர் மல்லிகா உள்ளே நுழைந்தார்.
எல்லோரும் குட் மார்னிங் சொன்னவுடன் அவர் வகுப்பை தொடங்க ஆரம்பித்தார்.
அவர் தன் பையிலிருந்து மெதுவாக ஒன்றை எடுத்து டேபிள் மேல் வைத்தார்.
” இன்று இதைப் பற்றி நான் சொல்லப் போகிறேன் ” என்றவுடன், சுனில் ஒரே பாய்ச்சலில் துள்ளிக் குதித்து, ” மிஸ், இது அரிக்கன் விளக்கு, கெரசின், திரி போட்டா, எரியும் என்று சொன்னான். டீச்சருக்கு ஒரே ஆச்சர்யம்.
” வெல் டன் சுனில், யு ஆர் வெரி பிரைட், ” என்று அவனை பாராட்டினார்.
சுனிலுக்கு மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை.
மனதிற்குள் தன் அம்மாவிற்கு நன்றி சொன்னான்.


8/2/2024

One Comment on “பி. ஆர்.கிரிஜா/அரிக்கன் விளக்கு”

  1. இளந்தலைபமுறையினருக்கு தெரியாத விஷயங்கள் பல உள்ளன. அதில் லாந்தர் என்றும் அரிக்கன் விளக்கு என்று அறியப்படும் இதுவும் ஒன்று.
    பாராட்டுகள்

Comments are closed.