நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்/மோகன் மீனாட்சி சுந்தரம் 

. இன்று நாம் பார்க்க இருப்பது பகவத் கீதையில் 11-வது அத்தியாயத்தின் தொடர்ச்சி

ஈசம்”, “ஈட்யம்” என்கின்ற அடைமொழிகளை பற்றி விளக்கும் பொழுது அர்ஜுனன் “இந்த அகில உலகத்தையும் கட்டிக் காக்கும் இந்திரன், சூரியன், வருணண், குபேரன், எமன் உட்பட உலகத்தை அடக்கி ஆளுகின்ற எல்லா தேவதைகளையும், தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கின்றவர் மகேஸ்வரனான நீங்கள் ஒருவர்தான். உங்களுடைய குணங்கள், கௌரவம், பெருமை ஆகியவை மிகவும் விரிந்த ஒன்றாகும். அகில உலகமும் சேர்ந்து எப்பொழுதுமே உங்களது புகழை பாடினாலும் உங்களுடைய பெருமையை முழுமையாக எடுத்து சொல்லி விட்டதாக ஆகாது.துதிக்கத்தக்கவர் என்றால் அவர் நீங்கள் ஒருவர்தான். உங்களை துதித்து மகிழ்விக்க போதிய ஞானமும், சொல்லாட்சியும் என்னிடம் இல்லை. அறிவற்றநான் என்ன சொல்லி உங்களை துதிப்பேன்? உங்களது பராக்கிரமத்தை பற்றி கூற ஆரம்பித்தால், அது உங்களுடைய பராக்கிரமத்தின் நிழலை கூட தொட முடியாது. நான் செய்யும் துதி உங்கள் பெருமையை குறைப்பதாகத்தான் ஆகும்” என்று கூறுகிறார். இதன்பின் தான் பகவானை சாஷ்டாங்கமாக வணங்குவது பற்றி கூறுகிறார். அதை நாளை பார்ப்போம்

All reactions:

6You, Amuthamozhi Mozhi and 4 others

5

Like

Comment

Send