
அழகிய சிங்கரின் என்பா
தினமும் கதவைப் பூட்டிக்கொண்டு வாருங்கள்!
கவிதைகள் எழுதலாம்! கருத்துகள் பகிரலாம்!
எத்தனை கவலைகள்! எத்தனை வேதனைகள்!
என்பாவில் அனைத்தையும் தொலைத்திடுவோம்!
- தினமும் கதவைப் பூட்டிக்கொண்டு வாருங்கள்!
தித்திக்கும் நினைவுகளைக் கவிதையில் வடிப்போம்!
புதியதோர் உலகத்தைக் கற்பனையில் படைத்து
முதுமையில் புதுமை செய்வோம்!
3.தினமும் கதவைப் பூட்டிக்கொண்டு வாருங்கள்!
மனக்கதவு திறந்திருந்தால் குப்பைகள் சேர்ந்துவிடும்!
குப்பைகளை அகற்றித்
தூய்மை படைத்திடவே
வரவேற்போம் நல்ல சிந்தனைகளை!
