தினமும் வாயிற்கதவைப்
பூட்டிவிட்டு வாருங்கள்…

1.தினமும் வாயிற்கதவைப் பூட்டிவிட்டு வாருங்கள்….
திறப்பதற்கே ஆட்கள் அருகிய
காலத்தில்…
பூட்டிவிட எந்த மனிதர்களும்
வருவதில்லை….
பூனைகள் வழி தனிவழிதான்.
2) தினமும் வாயிற்கதவைப்
பூட்டிவிட்டு வாருங்கள்…
கட்டளையை மீறுவதுதானே
மனிதர்களுக்கு இயல்பானது…
பிச்சைப் பாத்திரத்தில் ஈகையைப்பகிர எதுவுமில்லை…
சாத்திய கதவில் புதியபறவை.
♦.
