நாகேந்திரபாரதி/காத்திருக்கும் காதல்


கருமேகம் நீர் பொழிந்தால் காணாமல் போய் விடும்
மலர்ந்த பூ காய்ந்து விட்டால் மணம் எங்கோ ஓடி விடும்
தயிராக ஆன பின்னால் பால் திரும்பி வாராது
தை மாதம் வந்து விட்டால் மார்கழியும் மறைந்து விடும்
சென்று போன தெல்லாமே சேராது இயற்கையிலே
விட்டுச் சென்றவுன்னைத் தொட்ட உணர்வு மட்டும்
விடாமல் அலைக்கழிக்கும் வேதனையை என்ன சொல்ல
ஓரக்கண் மலராலே உள்ளத்தை வருடி விட்டு
ஈரத்துப் பார்வையினால் இதயத்தைத் திருடிவிட்டு
தூரத்துப் மாம்பழமாய்த் தொங்குவதை விட்டுவிட்டு
நேரத்தில் விழுந்து விடு நெருக்கத்தில் வந்து விடு
காலத்தில் கனிந்தால் தான் காதலுக்கு மரியாதை
பாலுக்கு வயதானால் பழுதாகித் திரிந்து விடும்
பாலைக்கு நீராகப் பாய்ந்து வந்து விடு
ஏழைக்குச் சோறாக இன்பத்தைத் தந்து விடு
நாளைக்கு வந்துவிடு நம்பிக்கை தந்து விடு