விஜயலக்ஷ்மி கண்ணன்/காதல்

காதில் மெல்ல உரசும் காற்றோடு காதல்.
ஆதாம் ஏவாள் நாள் முதல் கனிந்தது
இன்றுமென்றும் கனியும் இன்ப உணர்வு. ஊடலுக்குப் பின் கூடல் ,அழகிய காட்சி
கடலும் நிலவும் சொல்லுமே சாட்சி.

அன்னம் போல நடந்து, மயில் ஆடி, குயில் பாட
காதல் தோன்ற வேண்டாம். கம்பனின் சீதையும்
இராமனும்,.
காளிதாசனின் சகுந்தலையும் பரதனும்,
நளனும் தமயந்தியும்,
ரங்கனும்
கோதையும்,
அயர்வில்லா பட்டியல் ஆகும்
காதல் கிளிகளின்.!

உள்ளம் என் வசமில்லை தலைவா,
நானும் என் வசம் இழந்து,
மொட்டு பூவாகி விரியும் நம் காதலைச் சொல்ல முடியாது ,
விழிகள் விரிய காத்துக் கிடக்கும் உன் காதலி இங்கே.
என்ன சொல்லப் போகிறாய் என் உயிரே?