எஸ்.சுரேஷ்

கொட்டித் தீர்த்து
ஓய்ந்து விடும் மேகம்..
பள்ளம்தேடி
மழைநீர்
என்னவோ வடிந்துவிடும்..
வெயில் காய்ந்திட
தரையின் ஈரமும்
காய்ந்துவிடும்..
வம்பு வழக்கு
வியாபாரம் கட்டம்கட்டி
பரஸ்பரம்
திட்டித் தீர்க்கும்
அரசியல் என
இயல்பு வாழ்க்கையும்
திரும்பிவிடும்..
ஆனால் மழையால்
பயிரை இழந்தவர்களுக்கும்
உறவுகளின்
உயிரை இழந்தவர்களுக்கும்
கண்ணீர் இறங்கிக்
கன்னத்தை வருடி
ஆறுதல்
சொல்லிக்கொண்டே இருக்கும்
இன்னும்
வெகு நாட்களுக்கு..
