ஹரணி/பூனை கண்ணில்படவேயில்லை

அந்தப் பூனை அழகு
குட்டி வேறு.
விரட்ட வேண்டும்
யோசிக்கிறேன்.
பக்கத்து வீட்டில் பூனை
வளர்த்து தினமும்
சண்டையான கதை
இன்னும்..
ஆகவே வளர்ப்பது
கூடாது..
கொஞ்சம் உண்ணக்
கொடுத்தாலும்
தொடர்ந்து விடும்..
யோசனைக் கலைத்துப்
பார்க்கையில் காணவில்லை
பூனையை..
அதற்கப்புறம் பூனை கண்ணில்படவேயில்லை
இன்றுவரை..