கோபால்/பிரமயுகம் – மலையாளம்

ஆதிக்கம் , கொடுங்கோன்மை என்பது முகம் , உடல் என்பதை மாற்றுமே தவிர , அதன் தன்மை மாறாது. அடிமைகளின்றி அது ஜீவிக்க முடியாது. அடிமைகள் தானாக வந்து வலையில் விழ , தப்பித்தலின்றி அதன் காலடியில் , அதன் கருணையில் , அதன் உக்கிரத்தில் , அதன் குயுக்தியில் மாட்டி உழலும் அவலம்.

இது மூன்றே பாத்திரங்கள் கொண்ட 17 ஆம் நூற்றாண்டில் வடிவமைக்க பட்ட மாய மந்திர அம்புலிமாமா வகை , நாட்டுப்புற கதைகளின் சாயலுள்ள , கொடுங்கோன்மை , ஆக்ரமிப்பு , அழித்தொழிப்பு என்பதன் காட்சி உருவகங்களுடன் சொல்லப்பட்ட விறுவிறுப்பான பிரமையுடன் பார்க்க வைக்கும் திரை அரங்க பிரத்யேக அனுபவம்.

யாரை பாராட்டுவது , இயக்குநரையா , நடிகர்களையா , ஒளிக் கலைஞரையா , படத்தொகுப்பாளரையா , இசையமைப்பாளரையா என்று திணற வைத்த புதிர் படம்.

இதற்கு கருப்பு – வெள்ளையை தேர்ந்தெடுத்தது, ஒரு கனவின் மாயையை , உணர்வுகளின் உச்சத்தை கொடுக்கும் உன்னத அனுபவம்.

ஆம். ஒரு கற்றுக் கொள்ளும் யுகம் தாண்டி , எச்சரிக்கை யுகம் மீறி , பயம் தரும் பைத்தியக்கார யுகத்தில் மாட்டியல்லவா உழன்று திரிகிறோம்?

எப்படியோ , கேரளா மட்டும் சினிமாவின் அத்தனை சாத்தியக் கூறுகளையும் முயன்று பார்க்க , அனைத்து இந்தியாவும் அண்ணாந்து வியப்பதை தவிர வேறென்ன செய்ய?

One Comment on “கோபால்/பிரமயுகம் – மலையாளம்”

  1. மிகவும் அழகாக சொன்னீர்கள்
    கேரளாவும் வங்காளவும் எப்பொழுதும் திரைஉலகில்
    தனித் தன்மையுடன் திரைப் படங்களை தயாரிக்கின்றன.
    யதார்தவாதிகள்.

Comments are closed.