கலைச்செல்வி/புரிதலின் காலம் பழையது


புதிதாக உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை
உங்களுக்கும் என்னிடம் புதியதாக கேட்பதற்கு
எதுவுமில்லை.

இப்போதைக்கு என்னிடம் இருப்பதெல்லாம் கொஞ்சம் பழைய சொற்கள்
கொஞ்சம் பழைய காட்சிகள்
கொஞ்சம் பழைய நினைவின் தடம்
உங்களிடம் இருப்பதும்
அதே பழையது அவ்வளவுதான்

எத்தனை பழையதை வைத்திருக்கிறேன் பாருங்கள்.?
எத்தனை பழையதை கேட்கிறீர்கள் பாருங்கள்.?

ஆனால் அவை ஏன் தினம் தினம் எனக்கும் உங்களுக்கும் புதியதாகத் தெரிகிறது என்பதுதான் விளங்கவில்லை.


21.2.2024