பி. ஆர்.கிரிஜா – என்பா

(அழகியசிங்கரின் என்பா வகை)

  1. நான்கு நாட்களாக வயிற்று வலி;
    பாட்டி வைத்தியம் பலன் தரும்;
    அஞ்சறைப் பெட்டி கை வசம்;
    டாக்டரைப் பார்க்க வேண்டாம் !
  2. ஆயிரம் மருத்துவக் குறிப்புகள் கணினியில்
    நண்பர்கள், உறவினர்கள் ஆளாளுக்கு உபதேசம்;
    வாரம் ஒருமுறை உபவாசம் இரு;
    டாக்டரைப் பார்க்க வேண்டாம்!


22/02/2024