டி வி ராதாகிருஷ்ணன்/இனிக்கும் தமிழ் – 201



இராமாயணம் படிப்பவர்களும், சொல்பவர்களும் பொதுவாக அதன் கதை போக்கு, கதை
மாந்தர் பற்றி படிப்பார்கள்,
ஊர் வர்ணனை பற்றிய பாடல்களில் அவ்வளவாக கவனம் எடுத்துக் கொள்வது இல்லை.
என்ன வர்ணனை தானே, அதை படிக்காவிட்டால் என்ன ஆகிவிடும்….என அவற்றைப்
படிககமல் கதை சொல்லும் அடுத்த பாடலுக்கு வந்து விட
ஊர் வர்ணனை, அங்கு ஓடும் ஆறு, குளம், ஏறி, வீடு வாசல்கள், பொது மக்கள்
இவை பற்றிய குறிப்புகள் மிக சுவாரசியமானவை.
கொஞ்சம் பொறுமையுடன் ,நிதானமாக படித்தால் தமிழை ரசிக்க முடியும்..
கோசல நாடு.பற்றி பார்ப்போம்..
கோசலம் என்றால் மயில். மயில்கள் நிறைய உள்ள நாடு. மயில் நிறைய இருக்கிறது
என்றால், மழை நன்றாக பெய்கிறது என்று அர்த்தம். மழை பெய்தால், பயிர்
விளையும், பசி இருக்காது, கலையும் பக்தியும் நிறைந்து இருக்கும். சண்டை
சச்சரவு இருக்காது.
அந்த ஊரில், சில விஷயங்கள் நெறி பிறழாமல் இருக்கின்றன.
அவை எவை ?
மனிதர்களை குற்றங்களுக்கு உட்படுத்துவது புலன்கள். அவை தூண்டும் ஆசைகள்.
கோசலத்தில் சலனம் தரும் ஐம்புலன்களும் நெறியில் நின்றன.
எல்லை தாண்டாமல் ஒரு கட்டுக்குள் இருந்தன.
புலன்கள் அதற்குரிய பொருளை பார்த்து விட்டால் உடனே அம்பு போல் பாயும்.
பாய்கின்ற அம்பு இலக்கை தைக்கும்.. விட்ட அம்பை திருப்பி பிடிக்க
முடியாது. ஐம்பொறிகளை அம்பு என்கிறார் கம்பர்
எல்லோருக்கும் ஐம்புலன்களும் சலனம் தந்தாலும், பெண்களுக்கு கண்கள் ஒரு
படி மேலே. அலை பாயும். மயக்கும். ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டும். உயிர்
உண்ணும் கண்கள் என்பார் வள்ளுவர் இன்பத்துப்பாலில்.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண் (1084)

(பெண்மையின் வார்ப்படமாகத் திகழ்கிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும்
உயிரைப் பறிப்பது போல் தோன்றுகின்றனவே)
பெண்களின் கண்களும் ஒரு நெறியில் நின்றன. பெண்களின் கண்கள் நெறியில்
நிற்காவிட்டால், ஆண்களின் ஐம்பொறிகளும் நிலையில் நில்லாது.

கம்பன் பாடல்
ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்:

பொருள்
ஒன்றில் ஒன்று தாவிக்கொண்டே இருக்கும் ஐந்து பொறிகளான அம்புகளும்,வைரம்
வைடூரியம் போன்ற மணிகளால் ஆன கழுத்தில் அணியும் அணிகலன்கள் அசைந்து ஆடும்
மார்பகங்களைக் கொண்ட பெண்களின் கண்கள் என சண்டை பிடிக்கும்,வழி தவறி
செல்லாத கோசலம் என ஊரின் ஆற்றினை அணியாக அணிந்த நிலை கூறுவார் (அங்கு
ஓடும் நதி அந்த ஊருக்கு மாலை போட்டது போல இருக்கிறதாம்)

சரயு நதி பற்றி மேலும் சொல்கிறார்
இரவிதன் குலத்து எண் இல் பல் வேந்தர்தம்
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,
சரயு என்பது தாய் முலை அன்னது, இவ்
உரவு நீர் நிலத்து ஓங்கு உயிர்க்கு எலாம்.

சூரிய வம்சத்தை சேர்ந்த பற்பல அரசர்களுடைய நல்லொழுக்கம் (தவறாத
அரசாட்சியை) ஒத்த (வலிமை நிறைந்த வேகமும் பாய்ச்சலும்; அதே நேரத்தில்
கரைக்குள் மட்டுமே அடங்கிப் பாய்வதுமான) நடையை உடைய சரயுநதி, கடல்
சூழ்ந்த இந்த உலகத்தில் உயிரோடு விளங்கும் ஒவ்வொரு இனமும் தழைத்து
ஓங்குவதற்காகப் பால் நிரம்பியிருப்பதாகிய தாயின் மார்பகத்தைப் போன்றது.

இந்த நதி இவ்வளவு வேகத்துடன் பாய்ந்தாலும் கரைக்குள் அடங்கித்தான்
செல்கிறது. எப்படி சூரியவம்சத்து அரசர்கள் வீரமும் வேகமும் உடையவர்களாக
இருந்த போதிலும் தங்களுக்கு உரிய ஆட்சி நெறிகளைத் தாண்டாதவர்களாக
இருக்கிறார்களோ அப்படி. அதுமட்டுமில்லாமல், உயிர்க்குலம் ஒவ்வொன்றையும்
ஊட்டி வளர்ப்பதற்கான தாய்முலை போன்றது இந்த நதி. உயிருக்கான ஊற்றம் இது.
தழைப்பதற்கான ஆதாரம் இது

                         –

ReplyForwardAdd reaction