ஹரணி/தெருவில் பேருந்து ஓடிக்கொண்டு இருக்கிறது

தெருவில் பேருந்து ஓடிக்கொண்டு இருக்கிறது
இன்று நேற்றல்ல இருபது வருடமாய்
தேரோடும் சிவன் கோயில் தெருவது
சிவன் திருவடியே போற்றி

தெருவில் பேருந்து ஓடிக்கொண்டு இருக்கிறது
மக்கள் உயிரைக் காப்பாற்ற ஓடுகிறார்கள்
பேருந்தை நிறுத்த ஓடுகிறான் ஒருவன்
நிறுத்துங்கள் என்கிறார் இயக்குநர்.

தெருவில் பேருந்து ஓடிக்கொண்டு இருக்கிறது
வயலில் விமானம் ஓடிக்கொண்டு இருக்கிறது
ஆகாயத்தில் மக்கள் பறந்து போகிறார்கள்
திடுக்கிட்டு விழித்தான் கனவு.

தெருவில் பேருந்து ஓடிக்கொண்டு இருக்கிறது
குழந்தை குறுக்கே போகிறது பயமின்றி
சட்டென்று பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்
யாரும்மா குழந்தையைத் தூக்கு.

தெருவில் பேருந்து ஓடிக்கொண்டு இருக்கிறது
மாட்டினா மேல் மோதி நிற்கிறது
கொம்பு மட்டுமே உடைந்த மாடு
விருட்டென்று எழுந்து ஓடுகிறது

தெருவில் பேருந்து ஓடிக்கொண்டு இருக்கிறது
நடத்துநர் பயணச்சீட்டு கொடுத்து வருகிறார்
பயணிகள் பலரும் தூங்கி வழிகின்றனர்
ஓட்டுநர் ஒலியெழுப்பி ஓட்டுகிறார்.

தெருவில் பேருந்து ஓடிக்கொண்டு இருக்கிறது
பெண் ஓட்டுநர் பேருந்து ஓட்டுகிறார்
முன்னிருக்கையில் அமைச்சர் அமர்ந்து பயணிக்கிறார்
அரசின் செயல திட்டம்.

தெருவில் பேருந்து ஓடிக்கொண்டு இருக்கிறது
தெருவுல ஓடாது என்கிறாள் அம்மா
பொம்மைதானே விடு என்கிறார் அப்பா
விதிதான் என்கிறாள் அம்மா.

தெருவில் பேருந்து ஓடிக்கொண்டு இருக்கிறது
ஓட்டுநர் குடித்தபடி தெருவுக்குள் ஓட்டுகிறார்
நல்லவேளை பேருந்து நின்று விட்டது
எரிபொருள் தீர்ந்து விட்டது.

தெருவில் பேருந்து ஓடிக்கொண்டு இருக்கிறது
மரங்களில் பறவைகள் அமர்ந்து உள்ளன
ஏரியில் படகு பயணம் தொடர்கிறது
அழகாக வரையப்பட்ட ஓவியம்.