பி. ஆர். கிரிஜா

தெருவில் பேருந்து
ஓடிக் கொண்டிருக்கிறது

(அழகியசிங்கரின் என்பா வகைமை)

  1. தெருவில் பேருந்து
    ஓடிக் கொண்டிருக்கிறது
    சிலர் படிப்பிற்காக பேருந்தில் பயணம்
    பலரோ தொழில் நிமித்தம் பயணம்
    பேருந்து வரமே சாமானியனுக்கு!
  2. தெருவில் பேருந்து ஓடிக் கொண்டிருக்கிறது
    காதல் மலர்வதும் பேருந்து பயணத்தில்
    மழலை பிறப்பும் பேருந்தில் சாத்தியம்
    பேருந்து சிக்கனத்தின் அடையாளம் !


பத்து வரி கவிதை

தெருவில் பேருந்து ஓடிக் கொண்டிருக்கிறது
சிலர் ஏறுவர், சிலர் இறங்குவர்
பலரின் வாழ்வும் ஓடுவது பேருந்துவின்
விடாத ஓட்டத்தால்
காளையர் கன்னியர்
காதல் வாகனம் பேருந்து
பார்வை அற்ற பிச்சைக்காரனையும்
வாழ வைப்பது பேருந்து
பேருந்து அனைவரின்
அத்தியாவசியம் !


26/02/2024