
என்பா
தெருவில் பஸ் ஓடிக் கொண்டிருக்கிறது,
விரட்டிக் கொண்டே வருகிறது நாயும்
போட்டியில் ஜெயித்து விடுவோம் என்று
பாவம், தோற்றும் ஓடுகிறது!
பத்து வரி கவிதை
தெருவில் பஸ் ஓடிக்கொண்டிருக்கிறது
எதிரே ஒரு சைக்கிள்
கூட வரமுடியாது.
பஸ் நின்றது
இளசுகள் இருவர் ஏறினர்.
எழும்பூர் ரயில் நிலையம் போகணும் .
இறங்கு,இறங்கு
எதிரே போய் நில்லு
சீட்டுக் கொடுப்பவர் குரல்
காதைத் துளைத்து
உறங்கி வழிந்த
ஒருவர் நிமிர்ந்து
ஜன்னல் வழியாக
வெளியே நோக்கினார்.
தன் மகள் ஒருவனுடன்
கை கோர்த்து மாயமான காட்சி.
தலை உள்ளபடியே சுற்றுகிறது.
