அனங்கன்/தெருவில் பேருந்து ஓடிக்கொண்டிருக்கிறது

தெருவில் பேருந்து ஓடிக்கொண்டிருக்கிறது….
நிகழ்வு முற்றுப் பெறவில்லை…
அதனுடன் ஓடிக்கொண்டிருக்கும்…மனிதர்களுக்கான கதையை…
அந்த இயந்திரக்கூடு அறிந்திருக்கப்போவதில்லை.
ஓட்டுநரின் மனநிலையில் சிறிது பிசகினாலும்…
பலருடைய வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்…
ஆயினும் நம்பிக்கையைச் சுமந்தபடி அவை தினமும் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.


♦.