அதிரன்/மற்றொரு முறை

அலகில் அலகு பூட்டி
அமுதம் பரிமாறி
புணர்ந்து பூரிக்கும்
புறாக்களை
மாடத்தில் காணும்
பொழுதெல்லாம்
மற்றொரு முறை
வருடிப் பார்த்துக் கொள்கிறான்
நாள்காட்டியில்
தான் தாய் நாட்டுக்கு திரும்பயிருக்கும்
அந்த நாளை