மக்கள் திலகம்: அபூர்வப்.புகைப்படம்!

*\

தகவல் : முகநூலில் கந்தசாமி ஆர்

புரட்சித்தலைவர் அமெரிக்கவில் சிகிச்சை பெற்று வந்த பின்னர் மதுரைக்கு வந்து 6 நாட்கள் தங்கியிருந்தார்,

தாந் அமெரிக்க புரூக்ளின் மருத்தவமனையிலிருந்தே போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆண்டிபட்டி தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்,வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்

அந்த நாட்களில் தலைவர் மதுரை சர்க்யூட் ஹவுசில் தான் தங்கியிருந்தார்,

தலைவரைக்கான ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் சர்க்யூட் ஹவுஸ் முன்பாக குழுமியிருப்பார்கள்

தினசரி காலை 10 மணி தொடங்கி இரண்டு மணி வரை சர்க்யூட் ஹவுஸ் முன் ஒரு சாதாரண சேரில் அமர்ந்து கொண்டு பொதுமக்களை சந்திப்பார்..சில நேரம் எழுந்து நின்று கொண்டே பொதுமக்களை சந்திப்பார்,சிரித்துக் கொண்டே தான் பேசு வார்..பொதுமக்கள் தங்கள் தேவைகளை பரிவுடனும்,கவனத்துடனும் கேட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க சொல்வார்

பலருக்கு வற்றாத ஜீவநதியாக வந்து கொண்டிருக்கும்..தனது பாக்கெட்டில் கையைவிட்டு பணத்தை எடுத்து எண்ணாமல் எதிரில் இருப்பவர் கையில் திணிப்பார்

அப்போது ஒரு தெய்வீக சிரிப்பை உதிர்ப்பார்

சவுக்கு தடுப்பு வழியாக பொதுமக்கள் தலைவரை காண அனுமதிக்கப்பட்டனர்

போலீஸ் பொதுமக்கள் பக்கம் வரக்கூடாது என உத்தரவிட்டார்

இப்புகைப்படத்தை எடுத்தவர் பெயர் #சார்லஸ்..அப்போது ஜேம்ஸ் பிரடரிக் நடத்திய தினசரி நாளிதழில் பணியாற்றினார் #நானும்#அப்போது_அதில்#பணியாற்றினேன்

#தினசரி நாளிதழை தினந்தோறும் நாங்கள் தலைவர் பார்வைக்கு கொண்டு செல்வோம். தினசரியில் இரண்டு பக்கங்கள் புரட்சித்தலைவர் பொதுமக்களை சந்திக்கும் படங்களை பிரசுரிப்போம்

ஒருநாள் மூதாட்டி ஒருவரிடம் தலைவர் பேசிக்கொண்டிருப்பதை சார்லஸ் வித்தியாசமான கோணத்தில் படம் எடுத்திருந்தார் சார்லஸ்

(தமிழ் நாளிதழ் வரலாற்றில் புகைப்படம் எடுத்தவர் பெயரை பிரசுரமாகும் வழக்கத்தை கொண்டு வந்தது தினசரி நாளிதழ் தான்)

அப்புகைப்படம் தலைவருக்கு பிடித்து போக படம் எடுத்த இந்த சார்லஸ் யார் அழைத்து வாருங்கள் என உத்தரவிட்டார் தலைவர்

சிறிது நேரத்தில் சார்லஸ் தலைவர் முன்னால் நின்றார்,அவர் கையில் ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக கொடுத்து படத்தை வெகுவாக பாராட்டினார்

மலரும் நினைவுகள்

#படம்_சார்லஸ்

#நினைவலைகளிலிருந்து_காகிதம்_ராஜன்

தகவல்: தாய்

One Comment on “மக்கள் திலகம்: அபூர்வப்.புகைப்படம்!”

Comments are closed.