அழகியசிங்கர்/ ஆகட்டும் பார்க்கலாம்

எப்போதும் தெரு முனையில் அவளைப் பார்ப்பதுண்டு. விழுங்கி விடுவதுபோல் என்னைப் பார்ப்பாள்.
ஒருநாள் துணிச்சலுடன் கேட்டாள்.
“நீ என்னை விரும்பறியா?”
நான் அங்கு நிற்க விரும்பவில்லை. அவளைப் பார்த்தபடியே போய் விட்டேன்.

அடுத்தநாள் அவள் அங்கயே இருந்துகொண்டு திரும்பவும் கேட்டாள் : “நீ என்னை விரும்பறியா?”
“இல்லை” என்றேன். இதைச் சொன்னவுடன் அவள் முகம் மாறிவிட்டது.

சில தினங்கள் என் கண்ணில் தட்டுப்படவில்லை.
தினமும் தினமும் அவள் எப்போதும் நின்றிருக்கும் இடத்தில் என் பார்வை போய்க் கொண்டிருந்தது.
இந்தப் பெண்களை நம்பக் கூடாது என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

திரும்பவும் வழக்கம்போல் ஒருநாள் நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கும்போது நானும் உற்சாகமடைந்தேன்.

இப்போது சொனாள்:
“நீ என்னை விரும்பாவிட்டால் பரவாயில்லை. நான் உன்னை விரும்புகிறேன். நான் தேடி வருவேன்,” என்றாள்.
நான் ஒன்றும் சொல்லத் தெரியாமல் வந்து விட்டேன்.