தொடரும் தேடல்..

G முத்துசாமி 

தெருக்கள் எங்கும்
சுற்றி சுற்றி வந்தது
மழை நீர்!
தான் வடிந்து போகும்
இடம் தெரியாமல்!

சில வீடுகளில்
படிகளை முட்டிக் கேட்டது,
‘எங்கே என் வழியைத்
தொலைத்து விட்டீர்கள்? ‘

பதில் தெரியாமல்
பரிதவிக்கும் முகங்களைப் பார்த்து,
இரக்கங் கொண்டு,
தானே பின்வாங்கித்
தன் தொலைந்த வழியை
மீண்டும் தேடத் தொடங்கியது
மழை நீர்!

2 Comments on “தொடரும் தேடல்..”

Comments are closed.