விஜயலக்ஷ்மி கண்ணன்/சித்திரம் பேசுதடி

இன்று நான் வாசித்த க்கவ்8தை

சித்திரம் பேசுதடி
அத்தை மகள்
முத்துச் சிரிப்பில்
பித்தாகிப் போன
சித்தன் இவன்.

கண்ணோ இது
விண் மீனோ?
மண் மீதில் தேவதையோ?
நான் அறியேன்.

சங்கு புஷ்பம் செவி
இங்கே பூத்ததோ?
எங்கு இருந்தாலும்
நீங்காது தவழ்கிறது உன் முகம்.

தங்கு இன்றி
தென்றல் உனைத் தொட்டதும்
ஏங்கி நின்றது என் ஆவி
என்றாவது நான் ஆவேன் என்று.

அறியா வயதில்
புரியா நட்பில்
தேறி வந்த காதல்
முறிந்த பின்னும்.

சித்திரம் பேசுதடி

05.03.2024
மாலை மணி 5.45