வசந்ததீபன்/மழைக்கால இரவு

____________________

இரவுக்குள்  நடக்கிறேன்

இருள்  தான்  துணை

இக்கணத்தை  கடந்தாகணும்.

பீலிகையைக்  கண்டெடுத்தேன்

மனதுள்  கேவியழுகிறது  மயில்

அவளின்  முகம்  நினைவிலாடி  மறைகிறது.

மரம்  இலைகளை  உதிர்த்துக்  கொண்டிருக்கிறது

மண்  தின்று  கொண்டிருக்கிறது

வேர்கள்  கிளைகளுக்கு  புதிய  இலைகளை  அனுப்பிக்கொண்டிருக்கிறது.

அந்த  அயோக்கியன்  செத்து  விட்டான்

இந்த  பொறுக்கி  

மண்டையப்  போட்டுட்டாள்

நாடே  பரபரப்பாகி  

மகிழ்ச்சியில்  திளைக்கிறது.

டிக்..டிக்..டிக்..டிக்

எப்போது  வெடிக்குமோ?

டிக்..டிக்..டிக்..டிக்….

ஈரமண்ணின்  வாசம்  

முகத்தில்  மோதுகிறது

மழை  பெய்யவில்லை

கண்ணீரால்  நனைந்திருக்கிறது  நிலம்.

🦀