சுரேஷ் ராஜகோபால்/கடின உழைப்பு

விருட்சம் சொல் புதிது வழங்கும் இணைய கால கவியரங்கம், நாள் 05032024 கிழமை செவ்வாய் “கடின உழைப்பு” என்ற எனது கவிதையை படிப்பது சுரேஷ் ராஜகோபால், சிட்லபாக்கம், சென்னை.

இலக்கை அடைவதில்
பெரு முயற்சி செய்யுங்கள்
இன்னும் சொல்லப் போனால்
பேராசை கொள்ளுங்கள்
தெளிவான சிந்தனை
சீரான முயற்சி
கடின உழைப்பு
கண்டிப்பாகப் பலன் தரும்
குறிக்கோளை நோக்கி
கனவு காணுங்கள்
எந்தக் கட்டத்திலும் கனவு
காண்பதை நிறுத்தாதீர்கள்.


சிட்லபாக்கம்
05 03 2024 மாலை 05.25