
விடியலில் எழுந்தாள்
காபி சிற்றுண்டி
கட்டி எடுத்துப் போக குழந்தைக்கு நூடுல்ஸ் தனக்கு எலுமிச்சை சாதம்
சமைத்தாள்
அவன் காண்டீனில சாப்பிடுவான் சூடாக
பேருந்து படியில் தொங்கி பயணம்
மூச்சு முட்ட அலுவலகப் பணி
மறுபடியும் தொங்கு பயணம்
செருப்பை கழட்டியதும்
சட்னி தோசை தயாரித்தல்
குழந்தைக்குதவி வீட்டுப் பாடத்தில்
இரவு உணவு
குளியல்
நைட்டி
அன்பான கணவருக்கு நைட் டயூடி
பின் அலாரம் வைத்து உறக்கம்
இதன் நடுவில்
கணவர்
கைபேசியில் பாட்டி
தோழர்கள்
அடுத்த வீட்டு ஜொள்ளு
பார்ட்டி
தொலைகாட்சியில் செய்தியாளர்
எல்லோரும் அள்ளி வீசினார்கள்
மகளிர் தின வாழ்த்துக்களை
சிக்கனம் பாராமல்
8/3/24
