
இன்று 08.03.24 ( மகளிர் தினம்) விருட்சம் இணைய கால கவியரங் கில் நான் வாசித்த எனது கவிதை கீழே.
தன்னில் பாதியெனக்
காட்டி நிற்கிற இறை.
உயர்த்திக் கொண்டாடி
உவகிக்கிற மறை.
கை கோர்த்து இணையாய்த்
தொடங்கிய பயணத்தில்
உடல் அயர்ச்சியோ
உளச் சோர்வோ
தயங்கி நீ நிற்க,
உன் தோளிலும், தலையிலும் ஏறி
நான் உசத்தியென அகம்பாவம்
ஆணவம் வீணாய்க் கொண்டு
உன்னை மிதித்து நின்றேன் .
சுமந்து தாங்கி
ஈன்று வளர்த்தெடுக்கும்
வலுமிக்க உனக்கு
உதைத்து எழுந்து நிற்கக்
கூடுமெனத் தெரிந்தபின்,
உடன் நடந்து, துணையெனத்
தோள் தாங்கி பயணிக்கவே
இப்போ ஆசை.
தினமும் உன் தினம்தான்
இன்று கூடுதலாய்
உன்னைப் போற்ற ஒரு தினம்.
.
08.03.24.

ஆக! அருமை!