அழகியசிங்கர்/பெண்கள்

திருமணத்துக்குப்
பிறகு
முதலில் எனக்கொரு பெண் பிறந்தாள்

விளையாட்டுப் போல
அவளுக்கு
42 வயதாகிறது
எனக்கு 71 வயதாகிறது

அவளுக்கும்
முதலில் பெண் பிறந்து
பொறியியல்
கல்லூரியில் படிக்கிறாள்

என் பாட்டி
என் அம்மாவுக்குப்
பிறகு
என் பெண்
அவளுக்கும் பெண்!

எல்லாம்
சுழற்சி மயம்

நான் தினமும் பல
பெண்களைப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்

புத்தகங்களில் பெண் கதாபாத்திரங்கள்!

பெண்கள் எல்லோரும்
அவதிப் படுகிறார்கள் !

பெண்கள் தினத்தன்று
பெண்கள் எல்லோருக்கும்
வாழ்த்துகள்!