நா.கிருஷ்ணமூர்த்தி/அக்டோபர் 1970 வெளிவந்த கசடதபற

நா.கிருஷ்ணமூர்த்தி ஆசிரியர் பொறுப்பில் அக்டோபர் 1970 வெளிவந்த கசடதபற என்ற ஒரு வல்லின முதல் மாத ஏட்டில் வெளிவந்த தலையங்கம்

இலக்கியப் படைப்புகளின் மூலமாக இந்தஏடு என்னென்ன சாதிக்கப்போகிறது என்று பட் டியல் ஏதும் தருகிற உத்தேசம் இல்லை. இன்றைய படைப்புகளிலும், அவற்றைத் தாங்கி வருகிற பத்திரிகைகளிலும் தீவிர அதிருப்தியும் அதனால் கோபமும் உடைய பல இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், திறனாய்வாளர்களின் பொது மேடைதான் கசடதபற. ஊதிப் போன சுய கௌரவங்களாலும், பிதுங்கிய பார்வைகளாலும் இவர் கள் பாதிக்கப் படாதவர்கள். அரசியல், சமயம், மரபு இவை சம்பந்தப்பட்ட ஒழுக்கங்களுக்கு வாரம் தவறாமல் தோப்புக்கர ணம் போடுபவர்கள் யாரும் இவர்களில் இல்லை. இலக்கியத்தை அதுவாகவே பார்க்கத் தனித் தனியே தங்களுக்குப் பயிற்சி நிரம்பப் பெற்று பிறகு சேர்ந்து கொண்டவர்கள் இவர்கள். உலகின் இதர பகுதியின் இலக்கியத்தில் நிகழ்வனவற் றைக் கூர்ந்து கவனிப்பதிலும், தமிழ்ச் சிந்தனையில் புதிய கிளர்ச் சிகளை இனம்கண்டு கொள்வதிலும் இவர்கள். தேர்ந்தவர்கள். பலகாலமாகவும், பலராலும் சொல்லப் படுகிறது எனறு ஒன்றை ஏற்க மறுப்பதோடு எதையும் விமரிசன ரீதியாகப் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்துபவர்கள் இவர்கள். எழுத்துக்
கலை போலவே, சக கலைகளான ஓவியம், நாடகம் இவற்றிலும் நிகரான ஈடுபாடு உள்ளவர்கள் இவர்கள். இப்படிப்பட்டவர்கள் சேர்ந்து கசடதபறவை உரு வாக்கி இருக்கிறார்கள்.

சொந்த அல்லது வேற்றரசாங்கத்தின் பணம் ஏதும் கொல்லைப்புறமாக இவர்களுக்கு வந்திருக்கவில்லை. அல்லது பை கொழுத்துப்போன ஒருவருடைய இறுதிக் காலத்தியதே போன்ற ஆவலை நிறைவேற் றவோ. கேவலம் சுய விளம்பர நமைச்சலைத் தீர்த்துக் கொள்வதற்காகவோ கசடதபற வந்திருக்கவில்லை. மாறாக, சிந்திக்கிறவனுக்கு இன்றைய உலகம் விடும் அறை கூவல்களை ஏற் றுக்கொள்ள வந்திருக்கிறது. சமூகத்தின் கூட்டுப் பொறுப் பான கலாச்சாரத்தின் ஆழ அகலங்களை, ரகசிய – அம்பலங்களை இலக்கியத்தில் காட்டச் கசடதபற வந்திருக்கிறது.

புதிய எழுத்தாளர்கள், கவி ஞர்கள், கட்டுரையாளர்களை வரவேற்கக் கசடதபற பெரிதும் விரும்பும். எதையும் செய்யுங்கள் ஆனால் இலக்கியமாகச் செய்யுங் கள் என்று மட்டுமே கசடதபற சொல்லும்.

இலக்கியத்தை வைத்துப் ம் பிழைப்பு நடத்துபவர்களைப் பற் றிக் கவலை இல்லை. இலக்கிய ரொட்டியின் எந்தப் பகுதியில் வெண்ணெய் தடவப்பட்டிருக்கி றது, எனறு ஆராய்பவர்களைப் பற்றிக் கவலை இல்லை. இலக்கியத்தை வாழ்க்கையின் அனுபவப் பகிர்தலாக, முன்னோட்டமாகக் கருதுபவர்கள் எல்லோரையும் அழைக்கிறது கசடதபற.