சுரேஷ் ராஜகோபால்/”வாயசைப்பு”

விருட்சம் சொல் புதிது வழங்கும் இணைய கால கவியரங்கம், நாள் 09 03 2024 கிழமை சனி நேரம் மாலை 05.10 “வாயசைப்பு ” என்ற எனது கவிதையை படிப்பது சுரேஷ் ராஜகோபால், சிட்லபாக்கம், சென்னை.

மனிதப் பேச்சுக்கு
மொழி வேண்டும்
அது வாயசைப்பின் மூலம் தொடங்கும். 1

வெறும் வாயசைப்பு மட்டும்
பேச்சல்ல அது அதற்கான வெளிப்பாடுதான்
வார்த்தை வரவேண்டும். 2

சில சமயம் வாயசைப்பும்
இரகசியம் பரிமாறப் பயன்படும்
ஜாடைகள் மூலமாக. 3


சிட்லபாக்கம்
09 03 2024 மாலை 05.10 மணி