
அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 6 – 9/3/24
முட்டி மோதிப் பார்த்தாலும்
முக்கி முனகிப் பார்த்தாலும்
நுரை தள்ளி முயன்றாலும்
நூறு முறை அழுதாலும்
கரை தாண்ட முடியாது
கடல் அலையின் நாக்கால்
எப்போதோ சில சமயம்
கடற் தாயின் துணையோடு
சுனாமியாய்ச் சுழன்றடித்து
சுற்றுமுற்றும் அழித்து விட்டு
உள்ளே போய்த்தான்
ஒடுங்கிக் கொள்ள வேண்டும்
அவரவரின் விதிப்படி தான்
அவரவர்க்கு நடக்கும்
மதியாலே வெல்வதெல்லாம்
மாகாணி வீசம் தான்
நம் திறனை நன்குணர்ந்து
நல்வழியில் நடப்போம்
——-
