தஞ்சாவூர் ஹரணி/

கோடை காவியம்
அரங்கேற்றம்..

இணையக் காலக் கவியரங்கம்
நாள் 11.4.24
கோடை காவியம்
அரங்கேற்றம்..

வெயில் உருக்குப்
படலம்..

வெப்பக் காதைகள்
விதவிதமாய்த்
தலைவிரித்தாடும்..

ஆகவே மக்கள்
குடைவிரித்தாற்றுப்படை
குதூகலமாய் நிகழ்த்துவர்..

நாளெல்லாம் கழிந்திரவேறத்
தண்ணிலவுப் பிள்ளைத்தமிழ்
தாலாட்டில் உறங்கும்..

இப்படியே பெருங்காவியம்
நீண்டு தொடர்ந்திருக்கும்..