.சுரேஷ் ராஜகோபால்/”வெத்துத் துப்பாக்கி”

விருட்சம் சொல் புதிது வழங்கும் இணைய கால 8வது கவியரங்கம், நாள் 11 03 2024 கிழமை திங்கள் நேரம் மாலை 05.30 “வெத்துத் துப்பாக்கி” என்ற எனது கவிதையை படிப்பது சுரேஷ் ராஜகோபால், சிட்லபாக்கம், சென்னை.

துப்பாக்கியைக் காட்டி
மிரட்டினான் மீசைக்காரன்
அகப்பட்டவன் மிரண்டான்
தடுமாறி தடம் புரண்டான்

தப்பிக்க முடியாத
வகையில் சிக்கி விட்டோமே
அச்சத்தில் கண்ணீர்
வடிந்தது அருவிபோல்

மீசைக்காரனுக்குத் தான் தெரியும்
துப்பாக்கியில் குண்டே
இல்லையென்று; அது அவன்
திறமையின் வெளிப்பாடு,

வெத்து துப்பாக்கியை, அதிர்
வே ட்டுத் துப்பாக்கி போலக்
காட்டி காட்டி மிரட்டினான்
அச்சப்படும் கூட்டம் உண்டிங்கே.


சிட்லபாக்கம்
11 03 2024 மாலை 05.30